பதிவு செய்த நாள்
19
ஆக
2018
12:08
வீரபாண்டி: மஞ்சள் நீராட்டு ஊர்வலத்துடன், ஆடித்திருவிழா நிறைவடைந்தது. ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், கடந்த, 1ல் ஆடித்திருவிழா தொடங்கியது. குண்டம் இறங்குதல், தேரோட்டம், பூங்கரகம், பொங்கல் வைத்தல், வண்டி வேடிக்கை முடிந்து, நிறைவாக, மஞ்சள் நீராட்டு ஊர்வலம், நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, கோவில் முன், சிம்ம வாகனத்தில் மஞ்சள் புடவை சாத்தப்பட்டு, சர்வ அலங்காரத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், உற்சவர் அம்மனை எழுந்தருளச்செய்தனர். சிறப்பு பூஜை செய்து, அம்மன் மீது உப்பு, மிளகை பக்தர்கள் தூவினர். மேலும், ஒருவர் மீது ஒருவர், வண்ண பொடிகளை பூசி மகிழ்ந்தனர். அவர்கள், வாத்தியம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக, ஆட்டம்போட்டபடி ஊர்வலமாக வந்தனர்.
பாலாபிஷேகம்: ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மனுக்கு, நேற்று, 108 லிட்டர் பாலாபி ?ஷகம் நடந்தது. பின், தங்க கவசம் அணிந்து, கற்பூர தீபாராதனை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். உற்சவர் மாரியம்மன், வெட்டிவேர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் மாரியம்மன் மீனாட்சி அலங்காரம்; மதுரை மீனாட்சி சொக்கநாதர் தருமிக்கு, பொற்கிழி வழங்கும் காட்சி அலங்காரம் செய்துவைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.