பதிவு செய்த நாள்
31
ஜன
2012
11:01
திண்டுக்கல் : திண்டுக்கல் ஒய்.எம். ஆர்.பட்டி கிருஷ்ணபரமாத்மா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை அழகர்கோவில் தலைமை குருக்கள் சுந்தரநாராயணப்பட்டர், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினார். எம்.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். அன்னதானம் வழங்கப்பட்டது. யாதவா இளைஞர் அணி செந்தாமரைக்கண்ணன், கவுன்சிலர் தனபாலன், ராமலிங்கம், பாலன், ரமேஷ், காளிதாஸ், பழனிச்சாமி, ரகுபதி, ஆனந்த், சவுந்தரராஜன், ஞானசேகர் ஆகியோர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொருளாளர் ராஜகோபால் நன்றி கூறினார். சக்தி விநாயகர் டிரான்ஸ்போர்ட் ராஜாங்கம் பிள்ளை, வி.ஐ.பி. டெய்லர்ஸ் காளிதாஸ், செல்வி பெயின்ட்ஸ் ஜேசுதாஸ், மாரம்பாடி ஊராட்சி தலைவர் மைக்கேல் சவரிதாஸ், மேரி மாதா லாரி சர்வீஸ் பாலன், ஆனந்தா நெய் ஸ்டோர்ஸ் மோகன்தாஸ் பங்கேற்றனர்.