அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மழை வேண்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேல்மலையனுார் தாலுகாவில் தற்போது மழை பொய்த்து போனதால் ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் நீரின்றி வறண்டு காணப்படுகின்றது. இதனால் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதை தொடர்ந்து அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் மலைக்கோவில் அடிவாரத்தில் பெண்கள் ஒன்று கூடி தேவேந்திரனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு மழை வேண்டி வழிபாடு நடத்தினர். ஆழிகண்ணாபாடல் பாடி, நாமாவளிகள் கூறி மழை வருவதற்காக பிரார்த்தனை செய்து தீபாரதனை நடத்தினர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.