காரைக்கால்: காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள கோவில் கதவை உடைந்து, அம்மன் சிலை திருட்டப்பட்டது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி நகரில் கன்னிகாகுறிச்சி அம்மன் கோவில் பல ஆண்டுகளாக உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா கடந்த 13ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. இக்கோவில் சுமார் ஒன்றை அடியுள்ள அம்மன் உற்சவர் சிலை உள்ளது. கடந்த 17ம் தேதி இரவு அம்மன் கோவிலில் வாசல் முன்கதவு உடைத்து, ரூ.60ஆயிரம் மதிப்புள்ள அம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மறுநாள் கோவில் அறங்காவலர் ராஜமணிக்கம் கோவிலுக்கு சென்று பார்த்த போது, சிலை திருடியது தெரிய வந்தது. இது குறித்து நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பால் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள புதரில் இருந்து அம்மன் சிலையை போலீசார் கண்டெடுத்தனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.