பதிவு செய்த நாள்
20
ஆக
2018
04:08
* ஆகஸ்ட் 18 ஆவணி 2: மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, திருப்பரங்குன்றம் முருகன் பவனி, திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை, கரிநாள்.
* ஆகஸ்ட் 19 ஆவணி 3: மதுரை சொக்கநாதர் உலவாக் கோட்டை அருளிய லீலை, ராமேஸ்வரம் ராமநாதர் நந்திகேஸ்வரர் வாகனம், பர்வதவர்த்தினி யானை வாகனத்தில் பட்டினப் பிரவேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 20 ஆவணி 4: திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை முருகன் மயில் வாகனம், மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினி தங்கக் கேடய சப்பரம், விருதுநகர் சிவன் ரிஷப வாகனம், அகோபில மடம் 2வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.
* ஆகஸ்ட் 21 ஆவணி 5: குங்கிலிய கலய நாயனார் குருபூஜை, மதுரை சொக்கநாதர் வளையல் விற்ற லீலை, இரவு பட்டாபிஷேகம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 22 ஆவணி 6: ஏகாதசி விரதம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 7:23 – 7:59 மணி, குறுக்குத்துறை முருகன் உருகுச்சட்ட சேவை, மதுரை சொக்கநாதர் நரிகளை பரிகளாக்கிய லீலை, திருப்பரங்குன்றம் முருகன், திருவாதவூர் மாணிக்கவாசகர் மதுரை எழுந்தருளல்.
* ஆகஸ்ட் 23, ஆவணி 7: முகூர்த்தநாள், பிரதோஷம், மதுரை சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, விருதுநகர் சொக்கநாதர் தேர், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் வைரவேல் தரிசனம்.
* ஆகஸ்ட் 24, ஆவணி 8: வரலட்சுமி விரதம், திருவோண விரதம், நெல்லையப்பர் கோயிலில் சபாபதி அபிஷேகம், மதுரை சொக்கநாதர் விறகு விற்ற லீலை, பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சனம்.