Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் ... மூலஸ்தம்மனுக்கு 23ல் கும்பாபிஷேகம் மூலஸ்தம்மனுக்கு 23ல் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
10:08

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு பட்டாபிஷேகம் இன்று (ஆக.,21) இரவு 7:30 முதல் 7:54 மணிக்குள் நடக்கிறது. விழா ஆக.,9 கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் ஆக.,14 வரை கோயிலுக்குள் 2 ம் பிரகாரத்தில் இரவு சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது.

ஆக.,15 கருங்குருவிக்கு உபதேசம் அளித்தல், 16- நாரைக்கு முக்தி கொடுத்தல், 17- மாணிக்கம் விற்றல், 18- தருமிக்கு பொற்கிழி அளித்தல், 19- உலவாக் கோட்டை அருளல், 20- பாணனுக்கு அங்கம் வெட்டியது போன்ற திருவிளையாடல் லீலைகள் நடந்தன. இன்று  வளையல் விற்ற லீலை நடக்கிறது. மாலை 4:00 மணியளவில் மேலமாசி வீதி, மேலக்கோபுர தெரு, தானப்ப முதலியார் அக்ரஹாரம், வடக்கு ஆவணி மூலவீதியில் சுவாமி, அம்மன் தங்கப்பல்லக்கு வாகனத்தில் எழுந்தருள்வர்.


கோயிலுக்கு வந்ததும் இரவு 7:30 மணிக்கு மேல் 7:54 மணிக்குள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. சுந்தரேஸ்வரரிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாவது பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரர் கரத்தில் சேர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக.,22) நரியை பரியாக்கியது, ஆக.,23 பிட்டுக்கு மண் சுமத்தல், ஆக.,24 விறகு விற்றல் லீலைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar