இஸ்லாம் வழங்கும் இனிய பொன்மொழிகளைக் கேட்போமா!ததனிமனிதனின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.தபடைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவர்.தஅன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.தஇறைவன் ஒருவனே. அவனே அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே.த(இறைவனின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால், கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்று விடுவார்கள்.ததிண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றனர். மேலும், வீணானவற்றை விட்டு விலகியிருக்கின்றார்கள்.தஇறைவன் அருளிய உணவை உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்.