பதிவு செய்த நாள்
21
ஆக
2018
03:08
தொண்டு, தானம், இரக்கமான செயல்கள், ஆகியவற்றின் மூலம் பிறரைச் சந்தோஷப்படுத்தினால், நீங்கள் இன்பத்தை விதைப்பதோடு, இன்பத்தையும் அறுவடை செய்வீர்கள். நல்ல எண்ணங்களாலும், நற்செயல்களாலும், நற்சிந்தனையாலும் நாம் இன்பத்தைப் பெறலாம். ஏன்...விதியையே கூட நம்மால் மாற்றியமைக்க முடியும். தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் துõய்மைப்படுத்துங்கள். உடம்புக்கு வெளியே கிடைக்கும் இன்பத்தால் ஒரு போதும் நிறைவு கிடைக்காது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.தஅனைத்து தீய பண்புகளும் கோபத்திலிருந்து புறப்படுகின்றன. கோபத்தை அடக்கிவிட்டால், தாமாகவே அனைத்து தீயகுணங்களும் தொலைந்து போகும்.தீயவர்களைத் தண்டிப்பதையோ, நல்லவர்களை கவுரவிப்பதையோ இறைவன் செய்யமாட்டான். நாம் செய்த செயல்களே நமக்கு பரிசு அல்லது தண்டனையைத் தருகின்றன.பகைமை, பேராசை, தன்னலம், பொறாமை ஆகியவற்றை களைவதன் மூலம் இதயத்தோட்டத்தில் அமைதியை வளருங்கள், அப்போது தான் உங்களுடன் இருப்பவர்களுக்கும் அமைதியும், சமாதானமும் கிடைக்கும்.உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினால், உங்கள் லட்சியத்தை அடைவது உறுதி.பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள்.
அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயத்தின் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.உங்களை தாக்கும் ஆசைகளும், கஷ்டங்களும் எவ்வளவு அதிமாக இருந்தாலும் பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையை உங்களால் கட்ட முடியும்.உங்கள் வருங்காலம், தலைவிதி, ஒழுக்கம் இவை அனைத்தும் உங்களின் எண்ணங்கள், செயல்கள் மூலமாகவே அமைகின்றன.வாழ்க்கையில் உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும். ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற எண்ணினால் அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம் இவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.மிருககுணத்தைப் போக்கி, மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை. இந்த துõய தன்மையை அனைவரும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்க்கையில் உயரலாம். சமுதாயத்தில் ஒருவனது நல்வாழ்விற்கு அடிப்படையான பொறுமை, இரக்கம், உண்மை, சுயநலமில்லாமை, பரந்த மனப்பான்மை போன்ற குணங்களை வளர்ப்பது கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.உள்ளத்துõய்மையை ஏற்படுத்துவதன் மூலம், வீட்டிற்கும், நாட்டிற்கும் மட்டுமல்லாது உலகத்திற்கே நல்ல பணி செய்தவர்களாக மாறலாம்.தவயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் ஒருவனுக்கு கல்வி உதவாமல், நடைமுறை வாழ்க்கைத் தத்துவ அறிவையும் அவனுக்கு அது அளிக்க வேண்டும். உங்கள் கடமைகளை உண்மை உள்ளத்துடன் செய்யுங்கள். உங்களது உரிமைகள் கேட்காமேலேயே பின் தொடரும்.படுக்கையிலிருந்து எழும் நேரத்திலும், படுக்கைக்குச் செல்லும் பொழுதும் குறைந்தது ஐந்து நிமிடமாவது அன்றாடம் பிரார்த்தனை செய்வதுமனதிற்கு இதமளிக்கும்.உங்கள் குடும்பத்தாருக்கு தொண்டு செய்யும் போது நீங்கள் ஆண்டவனுக்கே தொண்டு செய்வதாக எண்ணுங்கள். அத்துடன் வாழ்க்கையைத் தைரியத்தோடுஎதிர்த்து நில்லுங்கள். புகழ்மிகும் வருங்காலம் உங்களை வரவேற்க காத்திருக்கும்.