திருமால், கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன், பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்திலுள்ள பலபத்ர ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள கோடியக்கரை குழகர் கோயில் ஆகியவை பலராமர் வழிபட்ட தலங்களாகும்.