அலங்காநல்லூரில் இன்று (ஆக்., 22)ல் திருபவுத்திர உற்ஸவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2018 11:08
அலங்காநல்லூரில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் இன்று (ஆக்., 22) திருபவுத்திர உற்ஸவ திருவிழா காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடக்கும் விழாவில் உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வார். 108 கலசங்கள் மற்றும் பவுத்திர பட்டு நூல் மாலைகள் வைத்து சிறப்பு பூஜை நடக்கும்.
ஆக்., 26 பவுர்ணமியன்று விழா நிறைவுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.