பதிவு செய்த நாள்
23
ஆக
2018
12:08
சென்னை: தாம்பரத்தில் உள்ள சிவசக்தி விநாயகர் – முருகர் கோவிலில் இன்று, கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கிழக்கு தாம்பரம், ரயில்வே காலனி புக்கிங் ஆபிஸ் அருகில், சிவசக்தி விநாயகர் – முருகர் கோவிலில், ரயில் நிலையத்திற்கு வருவோர் வழிபட்டு வந்தனர். தற்போது, இக்கோவில் சீரமைக்கப்பட்டுள்ளது. அப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம், இன்று நடைபெறுகிறது. இதற்கான யாகசால பூஜைகள், 20ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மூன்று நாட்களாக, யாக சால பூஜைகள் தொடர்ந்தன. இன்று அதிகாலை, நான்காம் கால யாகபூஜை, அவபிருதயாக மஹா பூர்ணாஹதி நடைபெறும். காலை, 8:30 மணிக்கு, விமான கும்பாபிஷேகம்; 9:00 மணிக்கு, சிவசக்தி விநாயகர் – முருகர் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெறும். காலை, 11:30 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.