பதிவு செய்த நாள்
23
ஆக
2018
12:08
காஞ்சிபுரம் : அடுத்த மாதம் நடைபெறவுள்ள, விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, மாவட்டத்தின் பல பகுதிகளில் மும்முரமாக நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா, அடுத்த மாதம், 13ம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை, பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கி, வழிபாட்டுக்கு வைப்பர்.இதற்காக, மாவட்டத்தின் பல பகுதிகளில், விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. இது குறித்து, காஞ்சிபுரம் அடுத்த, புஞ்சையரசந்தாங்கலில் சிலை செய்யும் ரஜத்ராம் கூறியதாவது:ஒரு அடியில் இருந்து, 9 அடி வரை, விநாயகர் சிலை செய்கிறோம். ஒரு அடி சிலை, 1,500 ரூபாய்.சில வாடிக்கையாளர்கள், முன்கூட்டியே பணம் கொடுத்து விடுவர். அவர்கள் விரும்பிய வடிவத்தில் விநாயகர் சிலை செய்கிறோம். தண்ணீரில், எளிதில் கரையக்கூடிய பேப்பர் கூல் மற்றும் மாவு கலந்த சிலைகளை தான் தயாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.