புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் பிரமோற்சவ விழா, கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இரவு, சித்தி–புத்தி விநாயகர் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர் கற்பக விருட்சம் மற்றும் சித்தி புத்தி விநாயகர் வீதியுலா நடந்தது. உற்சவம், செப்.8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசன் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.