கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2018 01:08
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7ம் தேதி துவங்கியது. இதனையொட்டி நாள்தோறும் இரவு மாரியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. கடந்த 18ம் தேதி காத்தவராயன் ஆர்யமாலா திருக்கல்யாணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று தேர் திருவிழாவையொட்டி காலை 7 மணிக்கு கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி அழைத்தல், காலை 9 மணிக்கு காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் கச்சிராயபாளையம் சாலை, காந்தி ரோடு, சேலம் ரோடு, கவரை தெரு உள்ளிட்ட தேரோடும் வீதிகளின் வழியாக பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.