தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2018 11:08
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் வழிபட்டனர்.
பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலையில் -வரும் 11.-11. -2018 முதல் 27.-11. -2018 வரை நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளுக்காக இன்று காலை ராஜகோபுரம் முன் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் வழிபட்டனர்.