பதிவு செய்த நாள்
24
ஆக
2018
11:08
ஓமலுார் : தலையில் தேங்காய் உடைத்து, குருமன்ஸ் பழங்குடியினர், நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம், கே.மோரூரில், 300க்கும் மேற்பட்ட, குருமன்ஸ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குலதெய்வம் வீரபத்திர சுவாமிக்கு, ஆவணி யில், திருவிழா நடத்தி கொண்டாடுவர்.அதன்படி, கடந்த, 22ல், குன்னத்துாரிலிருந்து, சுவாமி அழைத்து வருதலுடன், விழா துவங்கியது. நேற்று காலை, வீரபத்ரன், லிங்கம்மாள், ஒசம்மாள், பத்ரகாளி சுவாமிகளுக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வாள், ஈட்டி, சாட்டைகளை வைத்து, பூஜை செய்து, சக்தி அழைத்தலுக்கு, சேவை ஆட்டம் தொடங்கியது. அதில், வாள், சாட்டையுடன், மக்கள் பாரம்பரிய நடனமாடினர். தொடர்ந்து, அருள் வந்த ஆண்கள், பெண்களை, தரையில் அமரச்செய்து, அவர்களது தலையில், தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.