அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில், செல்வ விநாயகர் பெருமாள், பாலதண்டாயுதபாணி மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா, சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பேரூராதீன இளையபட்டம் மருதாசல அடிகள், வரன்பாளையம் சிவாச்சல சுவாமி முன்னிலையில் நடந்தது. முன்னதாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, புண்ணிய தீர்த்தம், முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவையொட்டி, ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம் இடம் பெற்றன. விழா ஏற்பாடுகளை, ஊர் மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.