பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
திருப்பூர்: மங்கலம், கணபதிபாளையம் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீமாரியம்மன், மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.திருப்பூர், மங்கலம் - கணபதிபாளையத்தில், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்கள் திருப்பணி முடிந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. 21ம் தேதி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.முதல்காலம், இரண்டாம் காலம் மற்றும் மூன் றாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து, கோபுரத்தில் கலசம் பொருத்தப்பட்டது. நேற்று, அதிகா காலை, 4:30 மணிக்கு, மங்கள வாத்ய இசை, பன்னிரு திருமுறைகள், அபிராமி அந்தாதி பாராயணம், வேதபாராயணம், நான்காம் கால யாகபூஜைகள், 32 தத்துவம், 64 கலைகளை, சன்னதிக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சியுடன், யாகவேள்வி நிறைவு பெற்றது.
காலை, 6:00 மணி முதல் 7:30 மணிக்குள், மங்கள விநாயகர் கோவில் கோபுரம், மூலஸ்தான மங்கள விநாயகர், வேம்பரசு, நாகராஜ கணபதி ஆதி விநாயகர், மாரியம்மன் கோவில் கோபுரம் மற்றும் அம்மனுக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முதல் ஸ்தானீகம் ஜெயசுப்புராம குருக்கள் தலைமையில், சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை, ஊஞ்சப்பாளையம் காவடிக்குழுவினரின், காவடி ஆட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலபூஜை வழிபாடு நடப்பதாக, விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.