பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
உடுமலை: உடுமலை அருகே, ஈசுவர செட்டிபாளையத்தில், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 31ல் நடக்கிறது. குண்டடம், சடையபாளையம், ஈசுவர செட்டிபாளையத்திலுள்ள, பழமையான மாகாளியம்மன் கோவிலில், புதிதாக கல் வேலைப்பாடுகளால் ஆன, கருவறை, முன் மண்டபம் என பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக, யாகசாலை பூஜைகள், வரும், 29ல், திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்குகிறது; நான்கு கால வேள்வி நடக்கிறது. வரும், 31ம் தேதி, காலை, 7:30 முதல் 9:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர் மற்றும் கோவிலுக்குட்பட்ட, 48 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர்.