திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்,முருகன் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பூணுால் மாற்றி வேத பாராயணம் படித்தனர். வேத காலத்தில் கல்வி நாளாக கடைபிடிக்கப்படும் நாள் ஆவணி அவிட்டம் என கருதப்படுகிறது. படைத்தல் கடவுளான பிரம்மாவிற்கு வேதம் கிடைத்த நாள் இது. பவுர்ணமியும் அவிட்ட நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் ஆவணி அவிட்டம். இதனையொட்டி நேற்று வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் தமிழ்நாடு பிராமணர் சங்க திருப்புவனம் கிளை சார்பாக பிராமணர்கள் புதிய பூணுால் அணிந்தனர். சுப்ரமணியர் சுவாமி கோயிலில் மடப்புரம் முரளி வாத்தியார் தலைமையில் பூணுால் மாற்றியதுடன் வேதபாராயணம் வாசித்தனர்.