திருவண்ணாமலை: ஆவணி மாதத்தில், பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடி வரும் நாளான, ஆவணி அவிட்டத்தை, வேத விற்பன்னர்கள் கல்வி திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில், அவர்கள், புது பூணூல் அணிந்து, விழா எடுக்கின்றனர். நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள், பிரம்ம தீர்த்த குளத்தில் நீராடி, புது பூணூல் அணிந்து வழிபாடு நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.