பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
நகரி: மூன்று கிராமங்களில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில் நடந்த தீ மிதி விழாவில், 3,000 பேர் காப்பு கட்டி தீமிதித்தனர். சித்துார் மாவட்டம், சத்திரவாடா கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி விழா, கடந்த, 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம் நடந்தது. நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், 1,500 பேர் காப்பு கட்டி பக்தர்கள் தீ மிதித்தனர்.அதே போல், புத்துார் மற்றும் ரேணிகுண்டா அடுத்த, பாப்பாநாயுடு கிராமங்களில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில் நேற்று நடந்த தீ மிதி விழாவில், மொத்தம், 1,500 பேர் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.