பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
மரக்காணம்: மரக்காணம் அடுத்த நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பிலியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதிஹோமம், கங்கை திரட்டல், வாஸ்து சாந்தி, பஞ்சபாலிகை, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், பிரவேச பலி முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மஹாபூரணாஹூதி, கோ பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, விசேஷ மூலிகை திரவிய ஹோமங்கள், மந்திர புஷ்பம் மகாதீப ஆராதனையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீ நிர்த்தக வினாயகர், ஸ்ரீ செல்லியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு முருக்கேரி ஸ்ரீலஸ்ரீசீனுவாச சாமி குழுவினர் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். கும்பாபிேஷகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் பூ அலங்கார வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.