பதிவு செய்த நாள்
28
ஆக
2018
11:08
உத்தரகண்ட்: தீய சக்திகளிடமிருந்து, தங்களை பாதுகாப்பதற்காக, உத்தரகண்ட் மாநிலம், சம்ப்வாத் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர், ஆண்டு தோறும், ஒருவர் மீது ஒருவர், கற்களை வீசி எறியும், ‘பக்வால்’ திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. கற்களை வீசி எறியும்போது, காயம் ஏற்படுவதால், நீதிமன்ற உத்தரவுப்படி, சமீபகாலமாக, கற்களுக்கு பதிலாக பூ மற்றும் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேற்று நடந்த விழாவில், 600 கிலோ பூ மற்றும் பழங்கள் பயன்படுத்தப்பட்டன.