சென்னை தாம்பரம் அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அப்பூர் என்ற தலம். இங்கு மலை மீது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இம்மலையில் பல மூலிகைகள் உள்ளன. இங்கு பெருமாளே பிரதானம் என்பதால் பெருமாளுக்குப் புடவை சாத்தி வழிபடும் வழக்கம் உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டால் கல்யாணத் தடை, வேலையில்லாமை, கடன் சுமை போன்ற பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.