தேனி மாவட்டம், சுருளி மலையில் முருகப்பெருமான் ‘சுருளியாண்டி’ என்ற பெயரில் ஆண்டிக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கைலாசபுடவு என்னும் குகையில் கைலாசநாதரும் குகையின் மேல் பகுதியில் முருகனும் இருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும். ஆடி அமாவாசையன்று சுருளி அருவியில் நீராடி தர்ப்பணம் செய்வர். இங்குள்ள பூதநாராயணப் பெருமாள் கோயிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுவது சிறப்பு.