பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
பாப்பிரெட்டிப்பட்டி: ராமியணஹள்ளியில் மாரியம்மன் உள்ளிட்ட, ஐந்து சுவாமி கோவில் கும்பாபி?ஷக விழா, நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, ராமியணஹள்ளியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில், ஞானாம்பிகை, கானஹஸ்தீஸ்வரர், சுப்பிரமணியர், நவநாயகர்கள் சுவாமிகளுக்கு தனித்தனியாக, கோவில் உள்ளது. கும்பாபி?ஷக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மகாகணபதி, மகாலட்சுமி நவகிரக யாக பூஜை நடந்தது. இரவு கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மங்கள இசை, இரண்டாம் கால பூஜையும், 9:00 மணிக்கு, யானை, குதிரை, காளையுடன், கும்பகலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கும்பாபி?ஷகம் நடந்தது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.