திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2018 11:08
-துாத்துக்குடி, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தேரோட்டம் செப்.8ம் தேதி நடக்கிறது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 3 மணிக்கு கொடிபட்டம் வீதி சுற்றி மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னர் கோயிலில் இரண்டாம் கிரி பிரகார செப்பு கொடிமரத்தில் அதிகாலை காலை 5:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.காலை 6:45 மணிக்கு கொடிமரத்திற்கு சோடஷ தீபாராதனை நடந்தது.கோயில் இணை ஆணையர் பாரதி, திருவாவடுதுறை ஆதினம் உள்பட பலர் பங்கேற்றனர்.விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி சிவன் கோயில் செல்வார். முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் திருவிழாவான செப் 8 அதிகாலையில் தேரோட்டம் நடக்கிறது.