பதிவு செய்த நாள்
31
ஆக
2018
11:08
விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலுார் விலக்கில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் ஜீவசமாதி விழா நடைபெற்றது.காலை 7:40 மணி முதல் 9:40 மணி வரை ஸ்ரீ கணபதி ஹோம், ஸ்ரீ சுதர்சனம், ஸ்ரீ லெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ சீரடி சாய்பாபா ஹோமங்கள், 108 சங்கு பூஜை, கலச பூஜை, பஞ்ச சூக்த பாராயணங்கள் நடைபெற்றது. பக்தர்கள் நேரிடையாக அபிஷேகம் செய்தனர். காலை 9:45 முதல் 10:15 மணி வரை துவாரகமாயி, கோபுரம் கும்பாபிஷேகம், 10:20 முதல் 10:30 வரை ஸ்ரீ சீரடி சாய்பாபா சிறப்பு அபிஷேகம் விஷ்ணுசகஸ்ரநாமபாராணயம், 108 நாமாவளி வாசித்தல், சாய்பாபா குறித்த சொற்பொழிவு நடைபெற்றது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை ஆர்த்தி,12:45 மணி முதல் 3:00 மணி வரை அன்னதானம், மாலை 6:00 மணிக்கு மீண்டும் மகா தீபாரதனை ஆர்த்தி நடந்தது. பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.