திருக்கழுக்குன்றம்: அமிஞ்சிகரை செங்கழனியம்மன் கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம், அமிஞ்சிகரை கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான செங்கழனிஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தீமிதி விழா, தேர்திருவிழா விமரிசையாக நடைபெறும். இக்கோவில், 50 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான, கும்பாபிஷேகம் நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி, மஹா அபிஷேகம் செய்தனர்.