பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
உடுமலை: தீபாலபட்டி, கமல காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.உடுமலை அருகேயுள்ள தீபாலபட்டி, ஸ்ரீ கமல காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபி ஷேக விழா, கடந்த, 29ம் தேதி, மங்கள இசையுடன் துவங்கியது.தொடர்ந்து, சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் முழங்க, இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன.நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, நிறை வேள்வியை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடந்தது.காலை, 9:10க்கு, மகா கும்பாபிஷேகம், மூலவருக்கு அபிஷேகம், தச தானம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான, ஏற்பாடுகளை, 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜனம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.