புதுச்சேரி: வக்ரதுண்டா மஹாகணபதி கோவில் கும்பாபிஷேக 11ம் ஆண்டு பூர்த்தி விழா மற்றும் சதுர்த்தி விழா நடந்தது. புதுச்சேரி பெரியார் நகரில் உள்ள வக்ரதுண்டா மஹாகணபதி கோவில் கும்பாபிஷேக 11ம் ஆண்டு பூர்த்தி விழா மற்றும் சதுர்த்தி பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு மேல் முதல் கால பூஜையும், தீபாராதனையும் நடந்தது. மாலை 4:00 மணியளவில் இரண்டாம் கால பூஜையும், கலச புறப்பாடும். மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 8:00 மணிக்குள் சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகமும், அதனை தொடர்ந்து அஷ்டோத்திர 108 சங்காபிஷேகம் மஹாதீபாராதனையும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்துவருகின்றனர்.