பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
திருப்பூர் : திருப்பூர், செவந்தாம்பாளையம் செல்வவிநாயகர், மகாளியம்மன் மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கோவில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த, 28 ல், கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அதன்பின், முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கோபுரங்களுக்கு கலசம் வைத்தல், மூன்றாம் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி நிறைவுற்று, காலை, 8:15 மணிக்கு, செல்வ விநாயகருக்கும், 9:00 மணிக்கு, மாகாளியம்மன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கும் மகா கும்பிஷேகமும் நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுவதாக, கோவில் நிர்வாகத்தினர், திருப்பணி கமிட்டியினர் தெரிவித்தனர்.