பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
திருவள்ளூர்: திருவள்ளூர், ஞானசக்தி விநாயகர் கோவிலில், நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், ஏ.பி.எஸ்., பள்ளி வளாகத்தில் புதிதாக ஞானசக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமான பணி நிறைவடைந்ததால், மஹா கும்பாபிஷேகம், 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று, காலை, 10:00 மணி முதல், 10:30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், ஏ.பி.எஸ்., பள்ளி குழும அறக்கட்டளை செயலர், ரமஷே் சுப்ரமணியம், பொருளாளர், பிரேமா சுப்ரமணியம், நிர்வாகிகள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர் மற்றும் மாணவ - மாணவியர் பொதுமக்கள் பங்கேற்றனர்.