பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், இரண்டாம் நாளாக பாலாலயம் நடந்தது. சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், திருப்பணி மேற்கொள்ள, அரசு, 53.55 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. மூலவர், அம்பாள், முருகள் சன்னதிகள் உள்பட, ஒன்பது இடங்களில் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக, நேற்று, இரண்டாம் நாளாக பாலாலயம் நடந்தது. கோவிலில் உள்ள விநாயகர், சிவலிங்கம், முருகன், அம்பாள் உள்ளிட்ட சிலைகளை எடுத்து வந்து, கோவிலுக்கு வெளியே உள்ள மண்டபத்தில் வைத்தனர். இதையடுத்து, திருப்பணி நடந்தது.