பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
அம்மாபேட்டை: சிங்கம்பேட்டை, காட்டூர் பகுதியிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அம்மாபேட்டை யூனியன், சிங்கம்பேட்டை, காட்டூரில் பெரியாண்டிச்சி அம்மன் படுத்திருப்பது போல சிலை அமைக்கப்பட்டது. அதன் அருகில் விநாயகர், அங்காளம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. கடந்த, 22லிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலை, விநாயகர் வழிபாடுடன் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் அங்காளம்மன், விநாயகர், பெரியாண்டிச்சி அம்மன் உட்பட, 108 பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, குருவரெட்டியூர், பூதப்பாடி, கோனேரிப்பட்டி, சித்தர், மொண்டிபாளையம், அலங்காரியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.