பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
குளித்தலை: மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., ரெத்தினத்தாம்பட்டி கிராமத்தில், புதியதாக கட்டப்பட்ட மாரியம்மன், விநாயகர், ரெத்தினகிரீஸ்வரர், மதுரைவீரன் கோவில்களுக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, பொது மக்கள் சார்பில் குளித்தலை கடம்பர்கோவில் காவிரியாற்றில் இருந்து, பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மாலையில், சிவாச்சாரியர்கள் யாக சாலையில் மஹாகணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், லஷ்மி ஹோமம் நடத்தினர். நேற்று காலை, 6:30 மணியளவில் யாக சாலையில் பொது மக்கள், பக்தர்கள் வழங்கிய பொருட்களை யாக குண்டத்தில் போட்டனர். தொடர்ந்து இரண்டாம் கால பூஜை செய்யப்பட்டு, கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.