தேனி;ஜெருசலேம் புனித பயணத்திற்கு செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். என, கலெக்டர் எம்.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அரசால் நபர் ஒருவருக்கு ரூ.22 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. புனிதப் பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள், விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப உறையில், ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு செப்.10க்குள் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, ஐந்தாவது தளம், அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பி பயனடையலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.