செங்கம்: மழைவேண்டி, காளியம்மனுக்கு, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, ஜவ்வாதுமலை அடிவாரமான ஊர்கவுண்டனூரை சேர்ந்த மலை வாழ் மக்கள், விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். வறட்சியால் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மழை வேண்டி, கிராம மக்களின் காவல் தெய்வமான காளி அம்மனுக்கு, 108 பால் குட ஊர்வலம் எடுத்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதனால், மழை பெய்யும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.