பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நாரணம்பாளையம் புதூர், அன்னை ஜெயராக்கினி ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சேலம் மறை மாவட்ட முதன்மை குரு பிலவேந்திரம் தலைமையில், கொடியேற்றம் துவங்கியது. கடந்த 26ம் தேதி முதல் தினமும் மாலை 6 மணிக்கு கொடி பவனி, திருப்பலி, மறைஉரை நடந்தது. நாளை (பிப்.,2) காலை 8.15 மணிக்கு, மெழுகுத்திரி பவனியும், தொடர்ந்து பெருவிழா சிறப்பு திருப்பலி, சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஆரோக்கியராயர் தலைமையில் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் வேண்டுதல் தேர் உலாவும், அருளப்பன், எம்மானுவேல், கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெறும். இரவு 9 மணிக்கு நாரணம்பாளையம் அன்னை கலைக்குழுவின் சமூக விழிப்புணர்வு நாடகம், நடனம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 12.30 மணிக்கு அன்னையின் திரு உருவம் தாங்கிய மூன்று ரதங்கள் பவனி வரும். ஃபிப்., 3ம் தேதி காலை 7 மணிக்கு நன்றி திருப்பலியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை சகாயராஜ், தலைவர் அருள் ரொசாரியோ ஆகியோர் செய்கின்றனர்.