பதிவு செய்த நாள்
03
செப்
2018
02:09
ஈரோடு: சதுர்த்தி விழா ஊர்வலத்துக்காக, விநாயகர் சிலை தயாரிப்பு, தீவிரமாக நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா வரும், 13ல் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. ஈரோட்டில் ஒவ்வொரு ஆண்டும், இந்து முன்னணி சார்பில், சதுர்த்தி ஊர்வலம் நடப்பது வழக்கம். நடப்பாண்டும் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக ஈரோடு, நசியனூர் சாலையில் உள்ள, கணபதி நகரில், சிலை தயாரிப்பு பணி நடக்கிறது. மூன்று அடி முதல், 13 அடி வரையிலான சிலைகள், மைதா மாவு, பேப்பர் மாவு கலவைகளில் தயாரிக்கப்படுகிறது. சிம்ம வாகன விநாயகர், மான் வாகனம், மயில் வாகனம், குதிரை வாகன விநாயகர் சிலைகள், ஜல்லிக்கட்டு விநாயகர், முருகன் வைத்திருக்கும் விநாயகர், சிவலிங்கம் வைத்திருக்கும் விநாயகர் என, பல்வேறு வடிவங்களில், சிலைகள் தயாரித்து வருகின்றனர். வெள்ளை நிறத்தில் உள்ள சிலைகளுக்கு, அடுத்த வாரத்தில் வண்ணம் தீட்டும் பணி தொடங்கும்.