பதிவு செய்த நாள்
03
செப்
2018
02:09
உடுமலை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சின்னவாளவாடி வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.ஆவணி மாதம் வரும் அஷ்டமியானது கிருஷ்ணர் பிறந்த நாளாக, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வீடுகளில், கிருஷ்ணரின் பாத சுவடுகளை அரிசி மாவில், தீட்டி, சுவாமியின் அருளை பெற, வழிபாடு செய்கின்றனர். நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சின்னவாளவாடி ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது.காலை, 6:00 மணிக்கு மகா சுதர்சன ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜை மற்றும் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ணருக்கு தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, குழந்தைகள் கிருஷ்ணன் ராதையாக வேடமணிந்து, கோலாட்டம் நடத்தினர். மாலையில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.