பல்லடம் - உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது தென்சேரிகிரி. இங்கு முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் தேவியர் சமேதராக நின்ற நிலையில் காட்சி தருகிறார். சூரபத்மனை அழிக்க முருகன் இத்தலத்தில் தவமிருந்து ஈசனிடம் மந்திரோபதேசம் பெற்றதால் இத்தலத்திற்கு மந்திரகிரி என்ற பெயரும் உண்டு. பக்தர்கள் இவரை மந்திராசல வேலாயுதமூர்த்தி எனப் போற்றிக் கொண்டாடுகின்றனர். இத்தலத்தில் ஞான தீர்த்தம் என்ற வற்றாத நீர் ஊற்று உள்ளது. இதில் நீராடி முருகனை வழிபட நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.