மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2012 04:02
திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன், என்று தான் கூறுவோமே தவிர, மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன், என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.