உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2018 10:09
உப்பூர்; ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா இன்று காலை 8:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் கருவறையில் உள்ள விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படுவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஆண்டு தோறும் இங்கு சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கும். இன்று காலை 8:45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. வெள்ளிகவசத்தில் வெயிலுகந்தவிநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செப்.11 ல் சித்தி , புத்தி ஆகிய இருதேவியருடன் வெயிலுகந்த விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக செப். 12 ல் தேரோட்டமும், செப். 13 ல் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரியும் நடைபெற்று விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினரும், மண்டகபடிதாரர்களும் செய்து வருகின்றனர்.