பதிவு செய்த நாள்
04
செப்
2018
12:09
பெ.நா.பாளையம்:துடியலூர் விநாயகர் கோவில் வளாகத்தில், பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணர் வழிபாடு நடந்தது. பின், அனைவருக்கும் வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார், செயற்குழு உறுப்பினர் வத்சலா, மாவட்ட பொதுசெயலாளர் தாமு, நிர்வாகிகள் மகேஷ் ஜெகதீஸ், சண்முக ராஜா, இளங்கோ, விஸ்வ இந்து பரிஷத் பாலன், குணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* சூலூர் அடுத்த பள்ளபாளைம் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கியுள்ளனர். கோகுலாஷ்டமியை ஒட்டி கலை நிகழ்ச்சிகள், வழுக்கு மரம் ஏறுதல், உரியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மாணவர்கள் நடனம் ஆடி, பார்வையாளர்களது பாராட்டை பெற்றனர். தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி கேசவானந்த மகராஜ் தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பஜனை பாடல்களை மாணவர்கள் பக்தி பரவசத்துடன் பாடினர்.