கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2018 12:09
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு கிருத்திகை மற்றும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, அன்று இரவு 8:00 மணி அளவில்ஆறுமுகசுவாமி களுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகம் சுவாமிகள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து 9:00 மணியளவில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடை பெற்றது. கண்டாச்சிபுரம், மடவிளாகம், வீரங்கிபுரம், புதுப்பாளையம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர் .ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி, உபயதாரர்கள் முருகவேல், திருநாவுக்கரசு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.