பதிவு செய்த நாள்
06
செப்
2018
12:09
சேலம்: வேளாங்கண்ணிக்கு, இன்று (செப்., 6ல்) முதல், 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி, புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழாவில், நாளை மறுநாள், (செப்., 8ல்) விழாவின் கொடியிறக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக முக்கிய நகரங்களிலிருந்து திரளானோர் வருவர். அதனால், சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப் படும், 22 பஸ்களின் எண்ணிக்கை தற்போது, 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய நகரங்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு, 50 பஸ்கள் என, 100 சிறப்பு பஸ்களை, இன்று (செப்., 6ல்) முதல், விரைவு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது.