ஆர்.எஸ்.மங்கலம் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2018 12:09
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைப் பாரி விழா ஆக.27 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு அன்று முதல் தினமும் கோயிலில் இளைஞர்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்று வந்தன. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (செப்., 4ல்) வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக விழாவின் கடைசி நாளான நேற்று (செப்., 5ல்) கோயில் இருந்து முளைப்பாரிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முளைப்பாரிகள் அரசூரணி குளத்தில் கரைக்கப்பட்டது.