கம்பம் யாதவர் சமுதாயத்தின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2018 01:09
கம்பம்: கம்பம் யாதவர் சமுதாயத்தின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி, உறியடி உற்ஸவ திருவிழா, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி கோலா கலமாக நடந்தது.
கம்பத்தில் யாதவ சமுதாயத்தின் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா, உறியடி திருவிழா நிகழ் ச்சிகள் இரண்டு நாட்களாக நடந்தது. யாதவ சமுதாயத்தின் நவநீதகிருஷ்ணன் மடாலயத் திலிருந்து நூற்றுக்கணக்கானபெண்கள் ஊர்வலமாக சென்று, கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். பின்னர் அங்கிருந்து உற்ஸவமூர்த்தியை அழைத்து வந்தனர். நவநீதகிருஷ்ண மடாலயத்தில் உற்ஸவருக்கு சர்வஅலங்காரம்செய்யப்பட்டு அபிஷேக, தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் நகர் வலம் வந்து, வேலப்பர் கோயில் முன் நடப்பட்டிருந்த வழுக்கு மரம் முன் வைக்கப்பட்டார்.
நள்ளிரவு 11:30 மணிக்கு துவங்கிய வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர் கள் முயற்சி செய்தும் பலனில்லை. நள்ளிரவு 1:00 மணிக்கு நந்தகுமார் ,13, என்ற பள்ளி மாணவர்,வழுக்கு மரம் ஏறி வெற்றி பெற்றார். கூடியிருந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் உறியடி மேற்கொள்ளப்பட்டு, சுவாமி கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஏற்பாடுகளை யாதவ சமுதாயத்தினர் செய்திருந்தனர்.